தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தின் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள்

விவசாயிகளின் வாழ்வை மாற்றியமைக்கும் வளர்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தின் மைல்கற்கள்

1868 சென்னை சைதாப்பேட்டையில்   வேளாண்மை பள்ளி தொடங்கப்பட்டது
1906 வேளாண் பள்ளி சைதாப்பேட்டையிலிருந்து கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது. சென்னையில்  வேளாண் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
1908 மாணவர்கள் வேளாண் கல்வி திட்டம் மூலம் வேளாண்மை தகுதிச்சான்றுக்கு அனுமதிக்கப்பட்டனர் (L.Ag.)
1909 சர் ஆர்தர் லாலி என்பவரால் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (AC &RI)  தொடங்கப்பட்டது.
1920 AC &RI சென்னை பல்கலைகழகத்துடன் இணைந்திருந்தது. புதிதாக மூன்றாண்டு இளநிலை வேளாண் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது.
1945 இரண்டாவதாக வேளாண் கல்லூரி பாபட்லாவில் (தற்போது ஆந்திர பிரதேசம்) தொடங்கப்பட்டது.
1958 வேளாண்மை, தோட்டக்கலையில் முதுகலை பட்டப்படிப்பிற்காக மண்டல முதுநிலை பட்டதாரி மையம் தொடங்கப்பட்டது
1960 பல்கலைக் கழகத்துடன் ஒருங்கிணைந்த நான்காண்டு இளநிலை வேளாண் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது, அதனுடன் வேளாண்மையில் முனைவர் படிப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
1965 மூன்றாவதாக வேளாண் கல்லூரி மதுரையில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, மதுரையில் முதுநிலை பட்டப்படிப்பு  1969 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது.
1971 தமிழ்நாடு வேளாண்மை கல்லூரிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் தலைமையகம் என நடைமுறைப்படுத்தப்பட்டது.
1972 தோட்டக்கலை ஒரு தனிபிரிவாக அமைக்கப்பட்டு அதில் இளநிலை பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வேளாண் பொறியியல் கல்லூரி கோயம்புத்தூரில் நிறுவப்பட்டது, இளநிலை வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1973 தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கோயம்புத்தூரில் முனைவர் பட்டப்படிப்பு அறிமுகம்
1975 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கோயம்புத்தூரில் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியலில் முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது.
1976 சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் ஆக்கக் கூறாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், இளநிலை கால்நடை மருத்துவ பட்டப்படிப்பில் பொருத்தமான மறுதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1977 மீன் வளர்ப்பு துறையில் இளநிலை பட்டப்படிப்பு திட்டம் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது.
முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு வேளாண் பொறியியல் துறையில் அறிமுகம்
1980 மனையியல் துறையில் இளநிலை (B.sc(H.sc) பட்டப்படிப்பு மதுரையில் தொடங்கப்பட்டது
1981 மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரையில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. முனைவர் படிப்பு 1988ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது
1989 முனைவர் பட்டப்படிப்பு திட்டம் வேளாண்மைத் துறையில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை, முதுகலை பட்டப்படிப்பு திட்டம், வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மேட்டுப்பாளையத்தில், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளத்தில் தொடங்கப்பட்டது.
1990 முதுகலை வேளாண் பட்டப்படிப்பு  வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம், தூத்துக்குடி மாவட்டம், வனகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையத்தில் முனைவர் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1998 உணவு பதப்படுத்தப்படும் துறையில் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்பு சுய ஆதரவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2002 இளம் அறிவியல் தோட்டக்கலை தொழில்நுட்பம் மற்றும் இளம் அறிவியல் வேளாண் உயிர் தொழில்நுட்பவியலில் சுய ஆதரவு திட்டம் அறிமுகம்
2004 இளம் அறிவியல் (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூல் பொறியில் துறையில்) சுய சார்பு திட்டம் அறிமுகம்
2005 வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது.
2006 பி.டெக். (உயிரிதகவலியல்)  சுய ஆதரவு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது

2008

கார்னல் பல்கலை, இதாகா , அமெரிக்கா  முதுநிலை இரட்டை பட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. டல்ஹெளசிக்கு,கனடா பல்கலைக்கழகம்- இரட்டை பட்டம் , பி.டெக் இளம் அறிவியல்  (சுற்றுச்சூழல் இயற்கை தோட்டக்கலை)

2011 இளம் அறிவியல் (பட்டுபுழுப்வியல்) அறிமுகப்படுத்தப்பட்டது. எம்.டெக். (Ag.) நானோ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது, எம்.டெக். சுற்றுச்சூழல் பொறியியல் அறிமுகப்படுத்தப்பட்டது
2012 முதுநிலை தாவர மரபணு வள தொலையுணர்வு அறிமுகப்படுத்தப்பட்டது

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015